Monday, September 08, 2008

கல்லூரியில் காதல்


காலைச்சூரியன் என்ணை
தட்டி எழுப்பினான்
இன்று கல்லூரியின்
கடைசிநாள்


பேருந்து நிருத்தத்தில்
காத்திருக்கிறேன்
என் தேவதைக்காக


அதோ!
அவள் வருவது தெரிகிறது


ஆம்!
நேற்றைய அம்மாவாசை இரவில்
நான் வானில் தேடிய
நிலவு - இன்று
தரையில் தவழ்ந்து
வருவது போல் வந்தாள்


இந்த தங்கதாமரை - இன்று
மஞ்சள் தாவனியில்
மலர்திருந்தது
புடவை கட்டிய பூவாய்!
கல்லூரியை வலம்வரும் தேராய்!
கால் கொலுசு கச்சேரிபாட!
காதில் கம்மல் நடனமாட!
அந்த அழகுநதி
பேருந்து நிறுத்தத்தில்
வந்து நின்றது


காலை நேர ரோஜாவில்
ஒட்டிக்கொண்டிருக்கும்
பனித்துளிகள் போல - அவள்
முகத்தில் முத்துமுத்தாய்
வியர்வை துளிகள்!


அவளின் கருப்பு கூந்தலில்
கட்டணமின்றி குடியேறியிருந்தன
மல்லிகைகள்!


பூவால் இவளுக்கு அழகா?
இவளால் பூவுக்கு அழகா?
பட்டிமன்றமே வைக்கலாம்!


மீன் விழிகள் மின்சாரமாய்
தாக்க
அருகில்வந்தவள்
“ஹாய்” என்றாள்


உள்ளத்து காதலை
உதட்டால் சொல்ல
முயன்றேன்..............
ப்பூபூ............ம்ம்ம்ம்ம்


பல்லவன் வந்து
பாதியில் குறுக்கிட்டான்
இருவரும் ஏறினோம்
“பல்லாக்கில் சுமக்க
நானிருக்க - உனக்கு
பல்லவன் எதுக்கடி?” -இத்தோடு
என்கவிதை புத்தகத்தின்
இறுதி பக்கமும் நிரம்பியது


கல்லூரி தேர்வுமுடிந்து
ஒவ்வொருவராய்
வெளியேவர - நானும்
வந்தேன் - அவளும்
வந்தாள்..


மீண்டும் “ஹாய் - ஹாய்”
எல்லோரிடமும் வாங்கிவிட்டேன்
நீங்க..............என்றவாறு
இருவரின் காலப்பதிவேடும்
கைமாறியது


பார்வை சிறையில்
பதுங்கிக் கிடந்தயேன்
காதலை - இந்த
காலப்பதிவேட்டில் கச்சிதமாய் செதுக்கினேன்


மீண்டும் காலப்பதிவேடுகள் கைமாறின..
இறுதியில் தனிமையில்
அதை திறந்து
பாவை பதிந்துவைத்த
பக்கத்தை தேடினேன்


பத்துநாள்
பசித்திருந்தவன்
கையில் கிடைத்த
உணவு பொட்டலம்போல் பிரித்தேன் !


மண்ணில் கலந்த
உணவுக்காக மண்ணை
கிளரும் கோழியின்வேகம் எனக்கு................


தேர்வு முடிவில் - தன்
எண்ணை தேடும்
மாணவனின் பயம் எனக்கு................


இறுதி பந்தில்ஆறு ரன் தேவை
முடிவுக்காக காத்திருக்கும் ரசிகனின்
ஆர்வம் எனக்கு................


கிடைத்துவிட்டது............
பாவையின் பதிவு
கிடைத்துவிட்டது............


மூன்று வருட ஏக்கத்தை
மூன்று வார்த்தையாய்
முருக்கி கட்டியிருந்தாள்......


ஆம்!
“ஐலவ்யூயூயூயூயூயூ..........”




பார்த்தேன்..படித்தேன்.... பறந்தேன்......
உலகையே மறந்தேன்..........
உயரே பறந்த பந்து
உள்ளங்கையில் விழுந்தது போல............


மழைகண்டவிவசாயி போல்........
மடை திறந்தவெள்ளம் போல்.........


எத்தனை மகிழ்ச்சி!?
அளவிட கோலும் இல்லை
அனுபவித்த ஆளும் இல்லை


எம்பிக் குதித்தேன்
தலையில் பலத்த அடி
திடுக்கிட்டு விழித்தேன்


“இன்னும் என்ன தூக்கம்?
காலேஜ்க்கு நேரமாச்சுஎழுந்திரு.. .. ..”
சப்தமிட்டு கொண்டிருந்தார்
என்தாய்!


http://www.tamilkurinji.com/ilakkyam_detail.php?id=1071

16 comments:

  1. நல்லாயிருக்கு

    ReplyDelete
  2. //
    நேற்றைய அம்மாவாசை இரவில்
    நான் வானில் தேடிய
    நிலவு - இன்று
    தரையில் தவழ்ந்து

    வருவது போல் வந்தாள்//

    Super…

    ReplyDelete
  3. //“பல்லாக்கில் சுமக்க
    நானிருக்க - உனக்கு
    பல்லவன் எதுக்கடி?”//

    அட, அட, அட…

    ReplyDelete
  4. நன்றி திவ்யபிரியா

    ReplyDelete
  5. //“பல்லாக்கில் சுமக்க
    நானிருக்க - உனக்கு
    பல்லவன் எதுக்கடி?” -இத்தோடு

    என்கவிதை புத்தகத்தின்
    இறுதி பக்கமும் நிரம்பியது//

    அருமை :)

    ReplyDelete
  6. //“பல்லாக்கில் சுமக்க
    நானிருக்க - உனக்கு
    பல்லவன் எதுக்கடி?” -இத்தோடு

    என்கவிதை புத்தகத்தின்
    இறுதி பக்கமும் நிரம்பியது//

    அருமை :)////////////
    நன்றி சேவியர்
    தங்களின் முதல் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  7. மிக அழகான கவிதை,
    ரசித்தேன் மிகவும்!!



    [கடைசியில் கணவுன்னு சொல்லிட்டீங்களே:((]

    ReplyDelete
  8. மிக அழகான கவிதை,
    ரசித்தேன் மிகவும்!!
    //////////

    நன்றி திவ்யா



    ////////////
    [கடைசியில் கணவுன்னு சொல்லிட்டீங்களே:((]
    //////////////////

    காதல் ஒரு கனவுதானே

    ReplyDelete
  9. very very very very.......................nice .................super.........

    ReplyDelete
  10. //கல்லூரியை வலம்வரும் தேராய்!கால் கொலுசு கச்சேரிபாட!
    காதில் கம்மல் நடனமாட!......

    அடடா....... என்ன ஒரு வருணனை.

    //மண்ணில் கலந்தஉணவுக்காக மண்ணைகிளரும் கோழியின்வேகம் எனக்கு................
    தேர்வு முடிவில் - தன்எண்ணை தேடும்மாணவனின் பயம் எனக்கு....

    எனக்கே டென்ஷன் வந்துடுச்சு.....

    கடைசியில இப்படி கவுத்து விட்டுடீங்க.

    ReplyDelete
  11. நன்றி குந்தவி

    .......,,,,,,,
    எனக்கே டென்ஷன் வந்துடுச்சு.....

    கடைசியில இப்படி கவுத்து விட்டுடீங்க.
    ...........,,,,,
    அதுலதாங்க கிக்கே இருக்கு

    ReplyDelete
  12. ////////
    very very very very.......................nice .................super........
    ///////

    நன்றி...........

    ReplyDelete
  13. Hi

    We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

    Please check your blog post link here

    If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

    Sincerely Yours

    Valaipookkal Team

    ReplyDelete
  14. ஆழமான காதல்..
    அழகான கவிதை...
    அமைதியான வாசிப்பில்
    சிதைந்து போனது என் மௌனம்..!

    ReplyDelete
  15. ஆழமான காதல்..
    அழகான கவிதை...
    அமைதியான வாசிப்பில்
    சிதைந்து போனது என் மௌனம்..!

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...