Monday, February 23, 2009

மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே......

சென்ற ஆண்டு விடுமுறையில் ஊருக்கு சென்ற போது "பாட்டிலொடுதான்" வரவேண்டும் என்று நன்பர்கள் (வயது 25இல் இருந்து 30க்குள்) சொல்லியிருந்ததால் நானும் வாங்கிச் சென்றேன்
......
அங்குதான் அதிர்ச்சியே ! ஆரம்ப காலத்தில் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் என ஆரம்பித்த குடி பழக்கம் பிறகு மூன்று மாதம் ஒருமுறை , மாதம் ஒருமுறை என முன்னேறி (!!!!) இப்போ வாரம் வாரம் சனி ,ஞாயிறு என்று வந்து விட்டது

குடியென்றால் எப்படி !!!?? காலையிலேயே ஆரம்பிக்கிறது , இறங்க இறங்க ஏறுவது । கூடவே புகைவண்டி அதுதாங்க சிகரெட்। ஆரம்பத்தில் அளவாக இருந்தது இப்போது அவர்களை அடிமையாக்கிவிட்டது
இதுக்கு என்ன கரணம் ??

** ஒன்று - நன்பர்கள் என்ற பெயரில் பழகுபவர்கள்- பத்து பதினைந்து வயதுகளில் அவர்கள் பழகும் பலரிடம் இருந்து இது வருகிறது . குறிப்பாக அவர்களை விட வயதில் மூத்தவர்களிடம் பழகும் போது அவர்களையே ஒரு ஹீரோவாக எண்ணி அவர்களிடம் உள்ள கெட்ட பழக்கங்கள் இவர்களிடமும் பரவுகிறது

*** இரண்டு - சினிமா நாயகர்கள்
இந்த மகான்கள் (!!!) பங்கு இதில் அதிகம் படம் முழுக்க சிகரெட் வாயுமாக அலைவது , சிகரெட்டை தூக்கி போட்டு பிடிப்பது , ஸ்டைலாக பிடிப்பது , காலரில் இருந்து சிகரெட் எடுப்பது இப்படி செய்யும் அந்த புன்ணியவான்களின் நடிப்பில்(!!!) மயங்கும் ரசிகன் சிகரெட், மது இல்லையென்றால் ஏதோ கவுரவ பிரச்சனை போல நினைக்கிறான் . நாமும் முயற்ச்சிப்போமே என்று ஆரம்பத்தில் தொடங்கி பிறகு அடிமையாகிவிடுகிறார்கள்...
அதிலும் இப்போ ஒருத்தன் இருக்கான் எல்லா படத்திலும் தண்ணி அடித்துவிட்டு வீட்டுக்கு வந்து கேள்வி கேட்க்கும் அப்பாவை திட்டுவது , ஏதாவது அழகான(இது முக்கியம்) பெண்ணை பார்த்தவுடன் "எலும்பு" துண்டை பார்த்த "நாய்' போல பின்னாடியே செல்வது (பின்னனி இசை உபயம் யுவன்) ... இவனையெல்லாம் பார்த்து வளரும் சிறுசுகள் வாழ்வை இப்படித்தான் வாழனும் என நினைக்கின்றன,
(ரசிகர் மன்றத்துல இருந்து ஆட்டோ வரலாம்..........)
" சினிமாவில் எவ்வளவோ நல்லகருத்துகள் உள்ளன அதையெல்லாம் பின்தொடர்கிறார்களா ??? " - என்று கேட்கலாம்
"நல்லது என்பது ஊட்டசத்து போல உடனே "ஆம்ஸ்" வளர்ந்து விட்டதா என பார்க்க கூடாது, மெல்ல மெல்லத்தான் பலன் கிடைக்கும் ,அதிகம் எடுத்து கொண்டாலும் கூட..."
" கெட்டது என்பது விசம் போல உடனே செயலாற்றும் , முதலில் உடலை குளிரச்செய்து பின்பு உயிர் நீக்க செய்வது விசம் , அதுபோலவே இந்த போதை வஸ்த்துகளும் முதலில் மகிழச்செய்து பின்பு துன்பம் கொடுக்கும்।"
போதை பழக்கம் உள்ளவர்கள் தாங்கள் ஒரு அடிமை என்பதை உணரவேண்டும் அப்போதுதான் அதிலிருந்து விடுதலையாவது பற்றி யோசிக்க முடியும் , இல்லாவிட்டால் மிக கடினம்
யாரையும் குறைசொல்ல வரவில்லை। என் சகாக்கள் சிகரெட் , மதுவால் அவர்களும் கெட்டு குடும்பத்துக்கும் பிரச்சனையாகி இருப்பதை பார்க்கும் பொழுது ஏற்ப்பட்ட ஆதங்கம் தான் இது , குடிப்பது அவரவர் உரிமை அதில் தலையிட நான் யார்?!?!?!


ஒரு கவிதை ;
மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே !
மரண ஊர்வலத்திர்க்கு மலையாகிப்போன பூக்களே !!
மதியை மதுவுக்கு விற்ற என் சகாக்களே !!!
கொஞ்சம் கேளுங்கள்
ஆடுற ஆடுற தண்ணிய போட்டுட்டு ஆடுற ஆடுறடா
வெளிச்சத்தில் தொலைச்சத இருட்டுல தேடுர
வாழ்க்கை உன்னதடா
வாழ்க்கை என்பதே பெரும் போதை - அதில்
ஏண்டா இந்த குடி போதை
பிராந்திய குடிச்சுட்டு
வாந்திய எடுத்துட்டு -- ( ஆடுற ....)।
குருட்டு குதிரையை நம்பி நீயும்
பயணம் போகாதே
ஓட்டை படகு ஒழுங்காய்த்தானே
ஊர் போய் சேராதே
தன்னை மறப்பது இன்பத்தின் உச்சம்
தன்னை இழப்பதில் எது மிச்சம் ???

( மப்புல இருந்தாலும் சரி கண்டிப்பா ஓட்டு போடனும்)

43 comments:

  1. நான் தண்ணி அடிக்கலை, இருந்தாலும் ஓட்டு போட்டேன்

    ReplyDelete
  2. ///
    நான் தண்ணி அடிக்கலை, இருந்தாலும் ஓட்டு போட்டேன்
    ///

    நன்றி நசரேயன்

    ReplyDelete
  3. தமிழ் குறிஞ்சி மற்றும் வலைப்பூக்கள் குழுவினருக்கு என் நன்றி

    ReplyDelete
  4. //சென்ற ஆண்டு விடுமுறையில் ஊருக்கு சென்ற போது "பாட்டிலொடுதான்" வரவேண்டும் என்று நன்பர்கள் (வயது 25இல் இருந்து 30க்குள்) சொல்லியிருந்ததால் நானும் வாங்கிச் சென்றேன்.

    muthalla ithukku oru kottu. (Got it)

    // குடிப்பது அவரவர் உரிமை
    It's not a right. It's the atmost evil thing they can do to their beloved ones.

    ReplyDelete
  5. ////
    muthalla ithukku oru kottu. (Got it)
    ////

    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
    வலிக்குது
    நான் என்ன தப்பு செய்தேன்????!!!!

    ReplyDelete
  6. ///
    // குடிப்பது அவரவர் உரிமை
    It's not a right. It's the atmost evil thing they can do to their beloved ones.
    ///

    நாம சொன்ன கேட்பாய்களா?!?!?!

    ReplyDelete
  7. அட நீங்க பொத்தனூர் பிரபுவா??

    நலமா?? என்னைத் தெரியுதுங்களா??
    என் தளம் வருகை தந்தமைக்கு நன்றீ!!!

    ReplyDelete
  8. ஊருக்கு சென்ற போது "பாட்டிலொடுதான்" வரவேண்டும் என்று நன்பர்கள்

    எந்த பாட்டிலுங்க???

    ஒண்ணுமே தெரியாத
    ஆதவா

    ReplyDelete
  9. /////
    அட நீங்க பொத்தனூர் பிரபுவா??

    நலமா?? என்னைத் தெரியுதுங்களா??
    என் தளம் வருகை தந்தமைக்கு நன்றீ!!!
    ////

    உங்களை நல்ல ஞபகம் இருக்கு
    உங்களின் புத்தகம் கற்றுக் கொடுத்தாள் - பதிவில் நான் பின்னுட்டம் இட்டுள்ளேன் என்று நினைக்கிறேன்
    தமிழ்மன்றாம் மூலம் உங்களை அறிந்தேன்

    ReplyDelete
  10. ///
    எந்த பாட்டிலுங்க???

    ஒண்ணுமே தெரியாத
    ஆதவா
    ////

    நம்பிவிட்டேன்....

    அட !!! நிஜமாவே நம்பிபிட்டேன்
    சொன்னா கேளுங்க!!!
    நிசமாத்தான் நான் உங்களை நம்பிவிட்டேன் போதுமா??!?!?!

    ReplyDelete
  11. //நான் என்ன தப்பு செய்தேன்????!!!!

    //சென்ற ஆண்டு விடுமுறையில் ஊருக்கு சென்ற போது "பாட்டிலொடுதான்" வரவேண்டும் என்று நன்பர்கள் (வயது 25இல் இருந்து 30க்குள்) சொல்லியிருந்ததால் நானும் வாங்கிச் சென்றேன்

    தப்பு என்று சொல்லிவிட்டு நீங்களே உங்கள் நன்பர்களுக்கு பாட்டில் வாங்கி சென்றது தப்புதானே?

    ReplyDelete
  12. பச்சத்தண்ணி கூட குடிக்காம பின்னூட்டம் போடுறேன்...!

    ReplyDelete
  13. /
    சென்ற ஆண்டு விடுமுறையில் ஊருக்கு சென்ற போது "பாட்டிலொடுதான்" வரவேண்டும் என்று நன்பர்கள் (வயது 25இல் இருந்து 30க்குள்) சொல்லியிருந்ததால் நானும் வாங்கிச் சென்றேன்/


    காலி பாட்டில் தானே கொண்டு போனீங்க????

    ReplyDelete
  14. /அங்குதான் அதிர்ச்சியே ! ஆரம்ப காலத்தில் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் என ஆரம்பித்த குடி பழக்கம் பிறகு மூன்று மாதம் ஒருமுறை , மாதம் ஒருமுறை என முன்னேறி (!!!!) இப்போ வாரம் வாரம் சனி ,ஞாயிறு என்று வந்து விட்டது/


    தினமும் என்ற அளவில் கூட முன்னேற்றம் இல்லாமல் இருக்கிறார்களே....:)

    ReplyDelete
  15. /
    குடியென்றால் எப்படி !!!?? காலையிலேயே ஆரம்பிக்கிறது , இறங்க இறங்க ஏறுவது ।/

    இது மேட்டரு....:)

    ReplyDelete
  16. சிங்கப்பூரில் இருக்கிற தைரியத்தில் இந்நாள் , நாளைய சூப்பர் ஸ்டார் நடிகர்களை பகைச்சுக்குறீங்க.....ஊருக்கு போறப்ப ஆட்டோ வராம இருந்தா சரி...:)

    ReplyDelete
  17. /ஏதாவது அழகான(இது முக்கியம்) பெண்ணை பார்த்தவுடன் "எலும்பு" துண்டை பார்த்த "நாய்' போல பின்னாடியே செல்வது /


    ஹா...ஹா...ஹா...

    ReplyDelete
  18. கவிதை நல்லா இருக்கு!

    ReplyDelete
  19. பிரபு சொன்னது…
    ///
    எந்த பாட்டிலுங்க???

    ஒண்ணுமே தெரியாத
    ஆதவா
    ////

    நம்பிவிட்டேன்....

    அட !!! நிஜமாவே நம்பிபிட்டேன்
    சொன்னா கேளுங்க!!!
    நிசமாத்தான் நான் உங்களை நம்பிவிட்டேன் போதுமா??!?!?!
    அதே... அதே

    ReplyDelete
  20. மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே......"
    கரெட்டா சொல்லிட்டிங்க.... விழுந்திட்டா ஈக்கள் மாதிரி வெளிய வரல்லாது...

    ReplyDelete
  21. super prabu...
    nalla pativu...
    thirunthathe jenmangkal irukkave seikinrana...
    yaar enna sonnalum avangkalaam ketpaangganu thonale...
    -sorry, something wrong with my keyboard-

    _malar_

    ReplyDelete
  22. ///
    தப்பு என்று சொல்லிவிட்டு நீங்களே உங்கள் நன்பர்களுக்கு பாட்டில் வாங்கி சென்றது தப்புதானே?
    ////


    எப்போதாவதுதானே என்று எண்ணி வாங்கி சென்றேன்
    இப்பட்டி எதிர்பர்க்கல

    ReplyDelete
  23. ///
    நிஜமா நல்லவன் கூறியது...
    பச்சத்தண்ணி கூட குடிக்காம பின்னூட்டம் போடுறேன்...!
    ////

    நம்பிவிட்டேன்


    ///
    தினமும் என்ற அளவில் கூட முன்னேற்றம் இல்லாமல் இருக்கிறார்களே....:)
    ////

    இதுவேறயா???

    ReplyDelete
  24. ///
    காலி பாட்டில் தானே கொண்டு போனீங்க????
    ///

    இல்லை இல்லை


    //
    சிங்கப்பூரில் இருக்கிற தைரியத்தில் இந்நாள் , நாளைய சூப்பர் ஸ்டார் நடிகர்களை பகைச்சுக்குறீங்க.....ஊருக்கு போறப்ப ஆட்டோ வராம இருந்தா சரி...:)
    ////

    ஒன்னும் செய்ய முடியாது

    ReplyDelete
  25. ///
    நிஜமா நல்லவன் கூறியது...
    கவிதை நல்லா இருக்கு!
    ///

    நன்றி நல்லவன்

    ReplyDelete
  26. ///
    malarvili கூறியது...
    super prabu...
    nalla pativu...
    thirunthathe jenmangkal irukkave seikinrana...
    yaar enna sonnalum avangkalaam ketpaangganu thonale...
    -sorry, something wrong with my keyboard-

    _malar_


    ///

    வாங்க மலர்விழி
    ரொம்ப நாளா ஆளையே காணல
    நன்றி

    ReplyDelete
  27. ஓட்டியாச்சு நண்பரே ...

    ReplyDelete
  28. \\தப்பு என்று சொல்லிவிட்டு நீங்களே உங்கள் நன்பர்களுக்கு பாட்டில் வாங்கி சென்றது தப்புதானே?\\

    அதானே ...

    ReplyDelete
  29. நட்புடன் ஜமால் கூறியது...
    \\தப்பு என்று சொல்லிவிட்டு நீங்களே உங்கள் நன்பர்களுக்கு பாட்டில் வாங்கி சென்றது தப்புதானே?\\

    அதானே ...
    ////

    சப்போர்டா?!?!?!?!

    ReplyDelete
  30. ///
    நட்புடன் ஜமால் கூறியது...
    கவிதை அழகு பிரபு.
    ///


    நன்றி

    ReplyDelete
  31. //தன்னை மறப்பது இன்பத்தின் உச்சம்
    தன்னை இழப்பதில் எது மிச்சம் ???//

    எல்லாவற்றிற்கும் பொருந்தும் சீரிய கருத்தை போகிற போக்கில் சொல்லி விட்டீர்கள்.

    நல்ல பதிவு.

    ReplyDelete
  32. ////
    பட்டாம்பூச்சி கூறியது...
    //தன்னை மறப்பது இன்பத்தின் உச்சம்
    தன்னை இழப்பதில் எது மிச்சம் ???//

    எல்லாவற்றிற்கும் பொருந்தும் சீரிய கருத்தை போகிற போக்கில் சொல்லி விட்டீர்கள்.

    நல்ல பதிவு.
    ////

    நன்றி பட்டாம்பூச்சி

    ReplyDelete
  33. நான் தண்ணி அடிக்கலை, இருந்தாலும் ஓட்டு போட்டேன்

    ReplyDelete
  34. ஒரு ஊர்ல ஒரு வணிகன் கடை வெச்சு இருந்தானாம். அவங்கிட்ட ஒருத்தன் வேலைக்கு சேரவே, முதல் நாள் கற்பூரம் எப்படி நிறை அறியறதுன்னு (எடைப் போடுறது) இப்படிச் சொல்லிக் கொடுத்தானாம். தராசுன்னு எதுவுமே இல்லையாமுங்க.... வணிகன் சொல்லிக் குடுத்த விதம்:

    அஞ்சேழ் க‌ழ‌ஞ்சினெடை யாழாக்குக் க‌ற்பூர‌ம்
    கொஞ்சுகிளி மொழியே கூறுங்கால் ‍ விஞ்சாது
    ந‌ன்றான‌ த‌ண்ணீர்க்கு நாழிப‌ல‌ம் ப‌ன்னிர‌ண்டாம்
    என்றாயு மேழிர‌ண்டா மென்.

    இந்த‌ சூத்திர‌த்தை வெச்சே, அவ‌ன் வாழ்நாள் பூராவும் க‌ற்பூர‌ யாவார‌ம் செய்துட்டு இருந்தானாம். இஃகிஃகி! இதுக்குப் பொருள்? அமெரிக்க‌ தொழில‌திப‌ரை ம‌ண‌ந்த‌ ந‌டிகையின் கதை?? நாளைக்கி வ‌ர்ற‌ ப‌ள்ளைய‌ம் பாருங்க‌....

    ReplyDelete
  35. ///
    பழமைபேசி சொன்னது…
    ஒரு ஊர்ல ஒரு வணிகன் கடை வெச்சு இருந்தானாம். அவங்கிட்ட ஒருத்தன் வேலைக்கு சேரவே, முதல் நாள் கற்பூரம் எப்படி நிறை அறியறதுன்னு (எடைப் போடுறது) இப்படிச் சொல்லிக் கொடுத்தானாம். தராசுன்னு எதுவுமே இல்லையாமுங்க.... வணிகன் சொல்லிக் குடுத்த விதம்:

    அஞ்சேழ் க‌ழ‌ஞ்சினெடை யாழாக்குக் க‌ற்பூர‌ம்
    கொஞ்சுகிளி மொழியே கூறுங்கால் ‍ விஞ்சாது
    ந‌ன்றான‌ த‌ண்ணீர்க்கு நாழிப‌ல‌ம் ப‌ன்னிர‌ண்டாம்
    என்றாயு மேழிர‌ண்டா மென்.

    இந்த‌ சூத்திர‌த்தை வெச்சே, அவ‌ன் வாழ்நாள் பூராவும் க‌ற்பூர‌ யாவார‌ம் செய்துட்டு இருந்தானாம். இஃகிஃகி! இதுக்குப் பொருள்? அமெரிக்க‌ தொழில‌திப‌ரை ம‌ண‌ந்த‌ ந‌டிகையின் கதை?? நாளைக்கி வ‌ர்ற‌ ப‌ள்ளைய‌ம் பாருங்க‌....

    ////

    கண்டிப்பா..........

    ReplyDelete
  36. ///
    பழமைபேசி கூறியது...
    நான் தண்ணி அடிக்கலை, இருந்தாலும் ஓட்டு போட்டேன்
    ////

    நன்றி

    ReplyDelete
  37. குடி என்பது கொண்டாட வேண்டிய ஒன்று!
    அளவாக குடித்தால் தான் கொண்டாட முடியும்!
    அதே நேரம் நமது பொருளாதாரத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

    ஒரு ஃபுல் அடித்தும் கொண்டாடலாம்,
    அரை குவாட்டரிலும் சந்தோசம் அடையலாம்.

    அவர்களது மனதை பொறுத்தது

    ReplyDelete
  38. ////
    வால்பையன் கூறியது...
    குடி என்பது கொண்டாட வேண்டிய ஒன்று!
    அளவாக குடித்தால் தான் கொண்டாட முடியும்!
    அதே நேரம் நமது பொருளாதாரத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

    ஒரு ஃபுல் அடித்தும் கொண்டாடலாம்,
    அரை குவாட்டரிலும் சந்தோசம் அடையலாம்.

    அவர்களது மனதை பொறுத்தது
    ////


    வாங்க "வால்"பையன்
    தங்களின் கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  39. குடியென்றால் எப்படி !!!?? காலையிலேயே ஆரம்பிக்கிறது , இறங்க இறங்க ஏறுவது //

    இறங்க இறங்க மாடிப்படி ஏறுவீங்களா இல்ல மரமா?

    ReplyDelete
  40. மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...///

    நல்ல தலைப்பு பிரபு

    ReplyDelete
  41. /////
    அண்ணன் வணங்காமுடி கூறியது...
    குடியென்றால் எப்படி !!!?? காலையிலேயே ஆரம்பிக்கிறது , இறங்க இறங்க ஏறுவது //

    இறங்க இறங்க மாடிப்படி ஏறுவீங்களா இல்ல மரமா?
    ////


    ஹையோ ஹையோ!!
    இந்த குழந்தைக்கு ஒன்னுமே தெரியல
    அவிங்க மருதமலை ஏறுவாங்க
    அம்புட்டுத்தான்

    ReplyDelete
  42. ///
    அண்ணன் வணங்காமுடி கூறியது...
    மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே...///

    நல்ல தலைப்பு பிரபு

    ///


    நன்றி அண்ணா

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...