Monday, April 20, 2009

வலைச்சரத்தில் நான்

இந்த வாரம் வலைச்சரத்தில் ஆசிரியர் பணியை எனக்கு அளித்துள்ளார்கள்

வலைச்சரம் முகவரி
http://blogintamil.blogspot.com/

படித்து உங்கள் கருத்துக்களை பதியுங்கள்

நன்றி

Tuesday, April 14, 2009

சினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள் - 4



மீண்டும் “சினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள்”
இது நான்காவது , மற்றவை



பல்லவி :


பெண்ணே பெண்ணே
பொய்பேசும் ஊமை பெண்ணே
கண்ணே கண்ணே
கவிபாடும் காதல் கண்ணே


உன் நடைகண்டு
நதியும் நாணல் கொள்ளும்
உன் இடைகண்டு
இளமை ஏக்கம் கொல்லும்
கொஞ்சி கொஞ்சி
என் உயிரை அது
தின்னும்

சரணம் 1 :


ஆண் :
உன் கண்ணில் காதல் நெருப்பு !

நான் எரிந்தால் நீதான் பொறுப்பு !


பெண் :
தொட்டால் படரும் தீயின் சிறப்பு

நீயாய் தொட்டால் நானா பொறுப்பு ?


ஆண் :
பதில்கூறி பாடிச் செல்லும் பனிபூவே

நீயின்றி போனால் நானும் தனித்தீவே ….


பெண் :
கவிபாடி காதல் செய்யும் கொள்ளைகாரா !
களவாடிபோக நானும் கடைத் தேரா..??!


ஆண் :
அடி நீயின்றி ஒரு கணம்
என்னுயிர் வாழ்வது
சாத்தியம்தானில்லை


(பல்லவி :
பெண்ணே பெண்ணே
பொய்பேசும் ஊமை பெண்ணே
………..)


சரணம் 2 :


பெண் :
நீ.. இருக்கும் வரை நான் இருப்பேன்
நீ.. இறக்கும் முன்பே இறப்பேன்


ஆண் :
நீ.. கிடைத்தால் உலகை மறப்பேன்

நீ.. மறுத்தால் வாழ்வை துறப்பேன்


பெண் :
இரவோடு கனவும் வந்து தாலாட்ட !
விடிகின்ற வேளை வரை சீராட்ட !


ஆண் :
கண்கண்ட பாகமெல்லாம் தீ..மூட்ட !
காணாத பாகமெல்லாம் நெய்யூற்ற !


என் இளமையில்
அடிக்கடி யாகங்கள் நடக்குது
வா வா எ(ன்)னை மீட்க

(பல்லவி :
பெண்ணே பெண்ணே
பொய்பேசும் ஊமை பெண்ணே
………..)


பாடி பாருங்க , சரியா மெட்டோடு வரிகள் இணைந்து போனால் ஓட்டு போடுங்க (இல்லாட்டியும் ஓட்டு போடனும் அது ஜநனாயக கடமை)




மீண்டும் சந்திப்போம்








Friday, April 10, 2009

வட்டத்துக்குள் பெண்!?


பெண்ணை சுற்றி வட்டம்
இது யார் போட்ட சட்டம் ? !
உற்று கவனி தோழி
சுற்றிய சுவர்களேல்லாம்
இப்போ தரைமட்டம்
.
பெண்விடுதலை பெண்விடுதலை
பேச்செதற்கு
உன் விடுதலை உன் கையில்
கோழியல்ல பருந்து நீ !
சிறைக்கதவுகள் சிதறி
சில காலம் ஆச்சு
சிறகுகள் விரித்து பறந்து வா .... .....
.
.தாயாக இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் பெண் குழந்தைக்கு நல்ல படிப்பும் உலக அறிவும் கிடைக்க செய்ய வேண்டும் . அவர்களால் முடியும் , புடைவைக்கும் நகைக்கும் போராட நேரம் ஒதுக்கும் பெண்கள் இதற்க்கும் நேரம் ஒதுக்கலாம் .பெண்களுக்கு அதிக படிப்பெதற்கு என்று சொல்லும் அம்மாக்களையும் நான் பார்த்துள்ளேன்
.
கழுகு ஒன்றை கோழி போல வளர்த்தால் அது தனக்கு பறக்க தெரியும் என்பதையே மறந்துவிடும் , இங்கே வளர்ப்பு ரொம்ப முக்கியம் . பெண்களுக்கு கல்வி கிடைக்க வேண்டும் । கல்வி பெற்று , பொருளாதார ரீதியில் மற்றவர்கள் சார்பு இல்லாமல் இருந்தால் அங்கே சுதந்திரம் இருக்கும் . பெண்ககல்வி பல பிரச்சனைகளை தீர்க்கும் என்பது என் நம்பிக்கை
.
சில பெண்கள் ஆண்களை போல உடையணிவது , சிகையழங்காரம் செய்வது ,ஆண்களை கண்டாலே எதிர்ப்பது (தன் தனிபட்ட காயங்கள் காரணமாக), இவைகள்தான் பெண்ணியம் என்று எண்ணுவது சரியல்ல என்பதே என்கருத்து .பெண் பெண்ணாகவும் ஆண் ஆணாகவும் இருந்து சமஉரிமையோடு ,சுயமரியாதையோடும் வாழ்வதே இனிய இல்லறம் , இனிய சமுகம் ,இனிய வாழ்வு
.
.கவிதை தொடர் சங்கிலி பதிவுக்கு அழைத்த நான் தகுதியானவனா?- க்கு நன்றியை தெரிவிக்கும் வேளையில், சங்கிலி கோர்த்தவர்கள் பட்டியலும்,
.
முதல் வட்டம் - ஷைலஜா அக்கா
இரண்டாம் வளையம் கோர்த்தவர் - எம்.எம்.அப்துல்லா
மூன்றாம் வளையம் கோர்த்தவர் - Mahesh
நான்காம் வளையம் கோர்த்தவர் - பழமைபேசி
ஐந்தாம் வளையம் கோர்த்தவர் - அப்பாவி முரு,
ஆறாம் வளையம் கோர்த்தவர்- நான் தகுதியானவனா?
ஏழாம் வளையம் கோர்த்தவர் - பிரியமுடன் பிரபு
அடுத்து கவின் - யை அழைக்கிறேன்

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...