Tuesday, April 14, 2009

சினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள் - 4



மீண்டும் “சினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள்”
இது நான்காவது , மற்றவை



பல்லவி :


பெண்ணே பெண்ணே
பொய்பேசும் ஊமை பெண்ணே
கண்ணே கண்ணே
கவிபாடும் காதல் கண்ணே


உன் நடைகண்டு
நதியும் நாணல் கொள்ளும்
உன் இடைகண்டு
இளமை ஏக்கம் கொல்லும்
கொஞ்சி கொஞ்சி
என் உயிரை அது
தின்னும்

சரணம் 1 :


ஆண் :
உன் கண்ணில் காதல் நெருப்பு !

நான் எரிந்தால் நீதான் பொறுப்பு !


பெண் :
தொட்டால் படரும் தீயின் சிறப்பு

நீயாய் தொட்டால் நானா பொறுப்பு ?


ஆண் :
பதில்கூறி பாடிச் செல்லும் பனிபூவே

நீயின்றி போனால் நானும் தனித்தீவே ….


பெண் :
கவிபாடி காதல் செய்யும் கொள்ளைகாரா !
களவாடிபோக நானும் கடைத் தேரா..??!


ஆண் :
அடி நீயின்றி ஒரு கணம்
என்னுயிர் வாழ்வது
சாத்தியம்தானில்லை


(பல்லவி :
பெண்ணே பெண்ணே
பொய்பேசும் ஊமை பெண்ணே
………..)


சரணம் 2 :


பெண் :
நீ.. இருக்கும் வரை நான் இருப்பேன்
நீ.. இறக்கும் முன்பே இறப்பேன்


ஆண் :
நீ.. கிடைத்தால் உலகை மறப்பேன்

நீ.. மறுத்தால் வாழ்வை துறப்பேன்


பெண் :
இரவோடு கனவும் வந்து தாலாட்ட !
விடிகின்ற வேளை வரை சீராட்ட !


ஆண் :
கண்கண்ட பாகமெல்லாம் தீ..மூட்ட !
காணாத பாகமெல்லாம் நெய்யூற்ற !


என் இளமையில்
அடிக்கடி யாகங்கள் நடக்குது
வா வா எ(ன்)னை மீட்க

(பல்லவி :
பெண்ணே பெண்ணே
பொய்பேசும் ஊமை பெண்ணே
………..)


பாடி பாருங்க , சரியா மெட்டோடு வரிகள் இணைந்து போனால் ஓட்டு போடுங்க (இல்லாட்டியும் ஓட்டு போடனும் அது ஜநனாயக கடமை)




மீண்டும் சந்திப்போம்








15 comments:

  1. வாழ்த்துகள் வரிகள் நன்றாக இருக்கு

    ReplyDelete
  2. கலக்குறேப்பா

    எனக்கு சொல்லி கொடேன் ...

    ReplyDelete
  3. நான் இந்தப் பாட்டை கேட்டது கிடையாது. ஆனா வரிகள் எல்லாம் சினிமா பாடலுக்கு ஏத்தமாதிரி இருக்கு.

    ReplyDelete
  4. மலர்விழிApril 16, 2009 12:20 AM

    சூப்பரப்பா...
    பாடல் ஆசிரியராக முயற்சி செய்யுங்கோ...

    ReplyDelete
  5. நல்லா இருக்குதுங்க பாட்டு வரிகள்... :)

    ReplyDelete
  6. /////
    ஆ.ஞானசேகரன் said...
    வாழ்த்துகள் வரிகள் நன்றாக இருக்கு

    /////

    நன்றி ஞானசேகரன்

    ReplyDelete
  7. /////
    ஆ.ஞானசேகரன் said...
    வாழ்த்துகள் வரிகள் நன்றாக இருக்கு

    /////

    நன்றி ஞானசேகரன்

    ReplyDelete
  8. ////
    நட்புடன் ஜமால் said...
    கலக்குறேப்பா

    எனக்கு சொல்லி கொடேன் ...

    ////

    நன்றி

    உங்களுக்கா ?? நானா???
    காமெடி கிமடி பன்னலயே?!?!?!?!

    ReplyDelete
  9. ////
    kunthavai said...
    நான் இந்தப் பாட்டை கேட்டது கிடையாது. ஆனா வரிகள் எல்லாம் சினிமா பாடலுக்கு ஏத்தமாதிரி இருக்கு.

    /////

    நன்றி

    பாடல் கேட்டு பாருங்கள் இன்னும் நல்லாயிருக்கு

    ReplyDelete
  10. ////
    மலர்விழி said...
    சூப்பரப்பா...
    பாடல் ஆசிரியராக முயற்சி செய்யுங்கோ...
    ///

    நன்றி
    இப்போதைக்கு வலைச்சரத்தில் ஆசிரியர்

    ReplyDelete
  11. /////
    Anand said...
    நல்லா இருக்குதுங்க பாட்டு வரிகள்... :)

    ////

    நன்றி ஆனந்

    ReplyDelete
  12. பாட்டு வரிகள் அபாரம்!
    வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  13. ////
    thevanmayam said...
    பாட்டு வரிகள் அபாரம்!
    வாழ்த்துக்கள் !!
    ////

    நன்றி தேவா

    ReplyDelete
  14. நல்ல முயற்சி, படைப்பும் பிரமாதம்!

    ஒப்பமுக்கு செலுத்த வேண்டிய இடுகை இது!!

    ReplyDelete
  15. ///
    பழமைபேசி said...
    நல்ல முயற்சி, படைப்பும் பிரமாதம்!

    ஒப்பமுக்கு செலுத்த வேண்டிய இடுகை இது!!
    ////

    நன்றி

    "ஒப்பமுக்கு " புரியலையே ?!?!?

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...