Friday, February 12, 2010

பிரச்சனைக்கு பின் என் தம்பி சிங்கப்பூர் வந்தாச்சு ........



                            

      கடந்த 4ம் தேதி சுற்றுலா விசா மூலம் சிங்கை வர இருந்த என் தம்பியை சென்னை விமான நிலையத்தில் “நீ வேலைக்குதான் செல்கிறாய்” என கூறி பயணம் செய்ய அனுமதிக்க வில்லை
முதல் பதிவை படிக்காதவர்கள்
http://priyamudan-prabu.blogspot.com/2010/02/blog-post.html
அங்கே சென்று படிக்கவும்

                                  நிறைய நண்பர்கள் கருத்துகளும் ஆலோசனைகளும் கூறி பின்னூட்டம் இட்டுள்ளார்கள் , அனைவருக்கும் நன்றி . நட்புடன் ஜமால் என் பதிவை ஈரோட்டில் இருக்கும் வழக்கறிஞர் எஸ்ரா இராஐசேகரன் . (அவரும் பதிவரே) http://gandhicongress.blogspot.com/ அவர்களிடம் காட்டியுள்ளார் . அவர் என்னை மின்ன்ஞ்சலில் தொடர்புகொண்டு விபரங்கள் கேட்டார் , தந்துள்ளேன்.

                                               இதற்க்கிடையில் 4ம் தேதி பயணம் தடைபட்டதும் , புதிதாக 8000 ரூபாய் செலவில் விமானசீட்டு எடுத்து 6ம் தேதி காலை 11.40 க்கு திருச்சியில் இருந்து புறப்படும் ஏர்-இண்டியன் எக்ஸ்பிரசில் பயணம் செய்து இரவு 8.30க்கு(வழக்கம் போல 40 நிமிடம் தாமதம்) வந்தார் . 

திருச்சி விமான நிலையத்திலும் வேலைக்கு செல்கிறாயா? என சந்தேக கேள்வி கேட்டுள்ளார்கள் , அங்கே எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் அதிகாரியாக பணிசெய்கிறார் , அவர் வந்து “இவர்(என் தம்பி) சுற்றுலாதான் செல்கிறார் , கண்டிப்பாக 17ம் தேதி இந்தியா திரும்புவார் அதற்க்கு நான் பொருப்பு” என உறுதி கூறிய பிறகே என் தம்பி விமானம் ஏற அனுமதிக்க பட்டார் .

                                                 சிங்கையிலும் எல்லா சுற்றுலா பயணிகளையும் விசாரித்தார்கள் , அவரிடம் எல்லாம்(விசா,கடவுச்சீட்டு, என் அடையாள அட்டை நகல்) சரியாக இருந்ததால் உள்ளே விட்டார்கள் , எல்லம் சரி என தெரிந்தும் சிங்கையில் உள்ளே விட்டு விட்டார்கள் , ஆனால் எல்லம் சரியாக இருந்தும் சென்னையில் பயணம் செய்ய விடாமல் தடுத்தது ஏன்?

                                     இந்த பிரச்சனையில் அதிக மன உளைச்சல் , தேவையில்லாமல் சென்னையில் இருந்து அவசரமாக திருச்சி பயணம், மேலும் 8000 ரூபாய் விமானசீட்டு செலவு என நாங்கள் அதிகம் பாதிக்க பட்டுள்ளோம் . நாங்கள் யாரையும் ஏமாற்றவில்லை , போலிவிசாவோ ,கடவுசீட்டோ(பாஸ்போர்ட்) எங்களிடம் இல்லை , அல்லது பொய்சொல்லி வேலை செய்யவும் வரவில்லை , அப்படியிருந்தும் இது ஏன்?

                                         நான் சிங்கையில் கிட்டதட்ட 6 வருடமாக இருக்கிறேன் ,என் தம்பியும் சிங்கையை சுற்றி பார்க்கட்டும் எனும் ஆசையில் அழைத்து வர செய்தேன் அதில்தான் இத்தனை பிரச்சனைகள்

                                       குடிநுழைவு அதுகாரிகள் தங்கள் கடமையை செய்ததாக சிலர் சொல்கிறார்கள் , அதை ஏற்க முடியாது , சுற்றுலா விசா கையில் இருக்கும் போது “நீ வேலைக்குதான் செல்கிறாய்” என்ற அந்த அதிகாரியின் குருட்டுதனமன சந்தேகத்தை மட்டும் வைத்து ஒருவனை திருப்பி அனுப்ப அவருக்கு அதிகாரம் உண்டா??

                                    “ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஒரு நிரபராதி தண்டிக்க பட கூடாது”- இதுதானே நம் வழிமுறை , ஆனால் இங்கே “ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கிறார்கள் தண்டிக்க படும் ஒருசிலரும் நிரபராதியாகவே உள்ளார்கள்

                             சுற்றுலாவுக்கான விசாவில் வெளிநாடு (சிங்கை,மலேசியா)  சென்று  அங்கேயே தங்கிவிடும் நபர்களை தடுக்க அரசு சரியான திட்டம் கொண்டுவரவேண்டும் , சந்தேகத்துக்கு இடமானவர்களுக்கு விசா கொடுக்காமல் மறுத்து இருக்கலாம் , அல்லது  இந்திய அரசே   “24 வயதுடன் ,படிக்காத கிராமத்து இந்தியன் எவனாவது வந்து விசா கேட்டார் தராதிக,” என்று ஒரு அன்பு மடலை பணிவுடன் எழுதி வெளிநாட்டு அரசுகளிடம் தந்துவிட்டால் , அவர்களும் விசாவை தராமல் விட்டிருப்பார்கள் , நானும் விசா இருக்கும் நம்பிக்கையில் பணம் கட்டி விமானசீட்டு வாங்கியிருக்க மாட்டேன் ,விமானசீட்டு இருக்கும் நம்பிக்கையில் விமான நிலையம் வரை வந்திருக்க , அந்த அதிகாரியிடம் அவமான பட்டிருக்க மாட்டேன். அதை விட்டுவிட்டு எல்லாம் முடிந்து பயணம் செய்ய போகும் கடைசி நேரத்தில் தடுதால் எப்படி??? வாயில நல்லா வருது...............

                               இதுதான் ஒரு ஜனநாயக நாட்டின் சட்டமா???? ரொம்ப கேவலமா மொக்கையா இருக்கு. இப்படி இருக்காது என்ற நம்பிக்கையில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன் . என் தம்பி 17ம் தேதி தமிழகம் சென்றது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க படும்.

                              நான் சிங்கை நிரந்தரவாசி, வரும் காலத்தில் என் அம்மா அப்பா, என வரும் கால மனைவி மற்றும் அவள் உறவுகள் என என்னை நம்பி சிங்கப்பூர் வருவோர் பட்டியல் நீள வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு முறையும் எல்லா ஏற்பாடும் செய்துவிட்டுகுடிநுழைவு அதிகாரியின் தயவுக்காக காத்திருக்க முடியாது . இப்போதே இதை பற்றி தெளிவாக முடிவு எடுக்கனும்

                           என் குடுப்பத்தாரும் என் உறவில் சிலரும் கூட வழக்கெல்லாம் எதுக்கு , அதுதான் சிங்கப்பூர் வந்தாச்சே , பிறகு வழக்கு எதற்க்கு வீண் அலைச்சல் , வீண் செலவு என்று பயப்படுகிறார்கள் . ஆனால் எனக்கு விட மனசு இல்லை . 


பிரியமுடன் பிரபு ...

.

37 comments:

  1. கேஸ் போட்டீங்களா இல்லியா?

    ReplyDelete
  2. தொடருங்கள் வழக்கை.முயற்சிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. உங்களுடைய கோபம் நியாயமானதே ! விடாதீர்கள் வழக்கு போடுவது நல்ல முடிவு தான். ஆனால் .......! முடிவு தெரியும் போது உங்களுக்கு வயதாகிவிடும். எங்க ஊர் பட்டதாரி களை போல .........!!!!!!!!

    ReplyDelete
  4. As i told you just an application asking for the reasons and refund of the money would be cheaper and faster under rights to information act. Because it is time bound and the highest authority will be called for enquiry if you go in for appeal normally they do respond well and in a polite manner. give a try and then decide.

    ReplyDelete
  5. தம்பி இந்தியா வந்ததும் தொடர்புகொள்ளவும் .
    சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு உண்டான அனைத்து உதவிகளும் செய்துதருகின்றேன் .

    ReplyDelete
  6. ரொம்ப சந்தோஷம்

    நல்லபடியாக சுற்றிகாட்டிவிட்டு நல்லபடியாக ஊர் திரும்பட்டும்.

    நிச்சியம் நியாயம் கிடைக்கும் - முயற்சிப்பதே நமது கடமை.

    ReplyDelete
  7. அன்பின் பிரபு

    நல்ல படியாக முடிந்தது பற்றி மகிழ்ச்சி - தாயகம் திரும்பிய உடன் வானம்பாடி கூறிய படி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மடல் அனுப்பவும் - பதிலைப் பொறுத்து மேல் நடவடிக்கை எடுக்கவும்.

    நல்வாழ்த்துகள் பிரபு

    ReplyDelete
  8. பிரபு இது தேவை இல்லாத வேலை, வெளினாட்டுப் பயணம் மற்றும் பாதுகாப்பு சட்டங்களின் படி அவர்களுக்குத்தான் அதிக உரிமை உண்டு. முன்னர் மிகவும் கடுமையாக இருந்த சட்டங்கள், மொராஜ்ஜி தேசாய் மற்றும் வாஜ்பாய் அவர்களின் காலத்தில் தான் குறைந்துள்ளது. இதில் பிரதமர் தலையிட்டால் தான் குடியுரிமை அதிகாரிகளைக் கட்டுப்படுத்த முடியும். அது இல்லாமல் ஏட்டில் இருக்கும் சட்டங்களை வைத்து, தீவீரவாதம் மற்றும் பொருளியல் மந்தம் இருக்கும் காலத்தில் ஒன்றும் செய்ய முடியாது. உன் அப்பா,அம்மா மற்றும் மனைவியருக்கு சந்தோகம் இல்லாமல் அனுமதி கிடைக்கும். படித்த அல்லது படிக்காத இளைஞர்களுக்குத்தான் இந்த கஷ்டம். இது எனது கருத்து. பின் உனது இஷ்டம். நன்றி.

    ReplyDelete
  9. இந்த இடுகையும் பின்னூட்டங்களும் எல்லோருக்கும் மன தைரியத்தையும் நம்பிக்கையையும் தரட்டும்!

    ReplyDelete
  10. உங்களுக்கும் உங்கள் தம்பிக்கும் பாராட்டு மற்றும் வாழ்த்துகள்,

    வழக்கு போட்டு வழக்கு செலவுக்கும் சேர்த்து இழப்பீடு வாங்காமல் விடாதீர்கள்

    ReplyDelete
  11. இந்த தெளிவு தீவிரவாதிகளின் ஊடுறுவலில் இருப்பதில்லை இவர்களுக்கு.....யாராவது அப்பாவி பொதுமக்களிடம் தங்கள் திறமையை காட்டுவதில் வல்லவர்கள் விடக்கூடாது அந்த அதிகாரியை...கோர்ட்டில் நிற்க வச்சி கேள்வி கேட்கணும்...

    ReplyDelete
  12. என்ன செய்யறது தம்பி சட்டம் அவர்கள் கையில்.எவ்வளவுதான் அரசுக்கு பணம் செலவு செய்தாலும் ஒரு தடையைய் தாண்ட அந்த ஓவ்வெரு தடைகல்லுக்கும் செலவு
    செய்யவேண்டுமாயிறுக்கு....

    நம் நாட்டின் நிலை.....

    விடாதே....
    விரட்டிபிடி...

    ReplyDelete
  13. that is india. They will not check real criminals. India will not change. I will give my full support to you give case against them. then only one solution will come.

    ReplyDelete
  14. முயற்சிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. All the f@*#+rs are working at Airport ,and They are not sure about their doings .

    I really hate that officers.

    ReplyDelete
  16. கைப்புள்ளFebruary 12, 2010 4:35 PM

    //கோர்ட்டில் நிற்க வச்சி கேள்வி கேட்கணும்...//
    இப்படியே உசுப்பேத்தி, உசுப்பேத்திதாண்டா ஒடம்ப ரணகளமாக்கிட்டனுங்க...

    ReplyDelete
  17. நண்பரே, முடிந்தவரை வானம்பாடிகள் அவர்கள் சொல்வது போல முதற்கட்ட முயற்சி செய்யலாம்.

    அது இயலாமல் போகும் பட்சத்தில் , வழக்கு தொடுப்பது பற்றி முடிவு செய்யலாம்.

    நமது நாட்டில் நீதி கேட்க போனால் , கையில் இருக்கும் நிதி பறி போகும்.
    தேவையற்ற அலைச்சல் மற்றும் கால விரையம் உங்களை பாதிக்கும்.

    நமது நீதி - வாடிவேலு - சிங்கமுத்து ,கருணாநிதி - ஜெயலலிதா போன்ற பணக்கார மக்களுக்கே....நம்மை போன்ற சாதாரண குடிகளுக்கல்ல.

    ReplyDelete
  18. வானம்பாடிகள் அய்யா சொன்னது போல முதலில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கவும். குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அவர்கள் பதில் சொல்லி ஆகவேண்டும். விரைவாக ஒரு விடிவு கிடைக்கலாம். இல்லையெனில், வழக்கு பதிவு செய்து நீங்கள் போராடலாம்.

    முயற்சி கட்டாயம் செய்யவேணும் முறையாக.

    தம்பி சிங்கை வந்ததில் மிக்க மகிழ்ச்சி பிரபு.

    ReplyDelete
  19. UN ROUDI THANAMELLAM CUSTOMS DA AKATHU

    ReplyDelete
  20. Anonymous said...

    PODA POLLU
    ///

    Anonymous said...

    UN ROUDI THANAMELLAM CUSTOMS DA AKATHU
    ///


    அய்யா அப்பன் பெயர் தெரியதவரே
    சொந்த பெயரில் வந்து பின்னூட்டம் இடும்

    ReplyDelete
  21. வானம்பாடிகள் said...

    As i told you just an application asking for the reasons and refund of the money would be cheaper and faster under rights to information act. Because it is time bound and the highest authority will be called for enquiry if you go in for appeal normally they do respond well and in a polite manner. give a try and then decide.

    ///

    நன்றி
    கண்டிப்பாக முதலில் அதை செய்கிறேன்
    எல்லாம் விசாரித்து விட்டுத்தான் அடுத நடவடிக்கை
    அவசரம் இல்லை

    ReplyDelete
  22. Comment deleted

    This post has been removed by the author.
    ///

    இது யாருப்பா??

    ReplyDelete
  23. அண்ணாமலையான் said...

    கேஸ் போட்டீங்களா இல்லியா?
    ///
    ஊருக்கு போன பின்

    ReplyDelete
  24. ரொம்ப சந்தோஷம்

    நல்லபடியாக சுற்றிகாட்டிவிட்டு நல்லபடியாக ஊர் திரும்பட்டும்.

    நிச்சியம் நியாயம் கிடைக்கும் - முயற்சிப்பதே நமது கடமை.

    12 February 2010 8:19 AM
    Delete
    Blogger cheena (சீனா) said...

    அன்பின் பிரபு

    நல்ல படியாக முடிந்தது பற்றி மகிழ்ச்சி - தாயகம் திரும்பிய உடன் வானம்பாடி கூறிய படி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மடல் அனுப்பவும் - பதிலைப் பொறுத்து மேல் நடவடிக்கை எடுக்கவும்.

    நல்வாழ்த்துகள் பிரபு
    /////

    நன்றி

    ReplyDelete
  25. பித்தனின் வாக்கு said...

    பிரபு இது தேவை இல்லாத வேலை, வெளினாட்டுப் பயணம் மற்றும் பாதுகாப்பு சட்டங்களின் படி அவர்களுக்குத்தான் அதிக உரிமை உண்டு.
    ..//

    கருத்துக்கு நன்றி நண்பரே

    இரண்டு பதிவுகளையும் தாங்கள் படித்திருபீர்கள் என நம்புகிறேன்
    எங்கள் மீது ஏதேனும் தவறு உள்ளது என் நீங்கள் நினைக்க மாட்டீர்கள் என்றும் நம்புகிறேன்

    தப்பு செய்யாமல் எதுக்கு 8000 வீண் செலவு எனக்கு , பாதிக்க பட்டவன் நியாம் கேட்க கூடாதா?
    8000 சின்ன பணமா??
    மனவுளைச்சல் எவ்வளவு?



    இது என் மன திருப்திகாக மட்டுமே
    வெற்றி தோல்வி பற்றி கவலை இல்லை
    அதே சமயம் நன்றாக விசாரித்துவிட்டே செய்வேன்
    உணர்ச்சிவச படமாட்டேன்
    உங்கள் கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  26. பாஸ்கரன் சுப்ரமணியன் said...

    நண்பரே, முடிந்தவரை வானம்பாடிகள் அவர்கள் சொல்வது போல முதற்கட்ட முயற்சி செய்யலாம்.

    அது இயலாமல் போகும் பட்சத்தில் , வழக்கு தொடுப்பது பற்றி முடிவு செய்யலாம்.
    ......
    //

    நன்றிங்க

    ReplyDelete
  27. ரோஸ்விக் said...

    வானம்பாடிகள் அய்யா சொன்னது போல முதலில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கவும். குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அவர்கள் பதில் சொல்லி ஆகவேண்டும். விரைவாக ஒரு விடிவு கிடைக்கலாம். இல்லையெனில், வழக்கு பதிவு செய்து நீங்கள் போராடலாம்.
    /.

    நன்றிங்க

    ReplyDelete
  28. மன உலச்சலும், அதனால் ஏற்பட்ட விடயமும் புரியுது. நிச்சயம் கேஸ் போடுங்க. அதற்கான நிவாரணம் கிடைத்தாலும் கிடைகலேனாலும் பரவாயில்லே இப்படி யாராவது ஒருத்தர் செய்தாலாவது மற்றவர்களிடமும் இந்தே வேலையை செய்யாமல் இருப்பர்.

    நிச்சயம் அடுத்த பதிவு கஸ்டம்ஸ் க்கு எதிரான கேஸில் வெற்றினு படிக்க காத்துக்கிட்டிருக்கேன்

    ReplyDelete
  29. வழக்கு போட்டு உட்ராதீங்க...

    ReplyDelete
  30. உங்கள் தம்பி சுற்றுலா விசா வைத்திருந்தும் வேலைக்குத்தான் செல்கிறாய் என்று தடுத்தார்கள். நான் ஊருக்கு சென்றுவிட்டு இந்தோனேசியா திரும்பும் போது( சிங்கப்பூர் வழியாக நான் இருக்கும் இடத்திற்கு வருவதுதான் சுலபம்) சிங்கப்பூருக்கான multiple entry business visit visa வும் இந்தோனேசியாவுக்கான stay permit-ம் கையில் இருந்த போதே ரிட்டர்ன் டிக்கெட் இல்லாமல் அனுமதிக்க முடியாது என்றார்கள். முதலில் பணிவாக எடுத்து சொன்னபோது கேட்கவில்லை. பின்னர் கொஞ்சம் குரலை உயர்த்தி என் பாஸ்போர்ட்டில் உள்ள விசா ஸ்டாம்பிங்குகளைக்காட்டி குறைந்தபட்சம் மாதம் நான்கு முறை சிங்கப்பூருக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையே பயணம் செய்கிறேன். அங்கெல்லாம் எந்தபிரச்சினையும் இல்லை எங்கே மட்டும் என்ன பிரச்சினை என்று சத்தம் போட்ட பிறகே அனுமதித்ததர்கள். நம் ஊரில்தான் இந்த லொள்ளு எல்லாம்.

    ReplyDelete
  31. பிரபு வழக்கு போட்டால் அதற்க்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்... இதை போல ஒரு சிலர் அரசு கம்முனாட்டிகளை எதுவும் செய்ய முடியாது என்று திமிர் தான் அனைத்து குற்றங்களுக்கும் காரணம்..

    வெற்றி பெற வாழ்த்துக்கள் (என்னால் முடிந்தது)

    ReplyDelete
  32. பின்னூட்டம் இட்ட
    கிரி
    குந்தவை
    கவிஸ்யா
    புலவன் புலிகேசி
    அபுஅKஸ்ர்

    எல்லோருக்கும் நன்றி

    ReplyDelete
  33. உடாதிங்க..... முறையான ஆவணங்கள் இருந்தால் விட வேண்டியது தானே.... சுத்தி பார்க்க அல்லது வேலைக்கு போன அவர்களுக்கு என்ன வந்தது..... யாரு சொன்னாலும் கேட்காதிங்க.வழக்கு தொடுங்க வாழ்த்துகள்(இப்படி உசுப்பி விட்டதான் ஒரு விமோசனம் கிடைக்கும்)

    ReplyDelete
  34. அடேடே நீங்கள் சிங்கப்பூரில் தான் இருக்கிறீர்களா? உங்களை சந்திக்க முடியாமல் போய்விட்டதே?:(

    கேபிள் சங்கர்

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...