Wednesday, February 17, 2010

காதல் மழை.......காதல் கதை

 


 " சீ சீ இந்த மழை விடாது போல் இருக்கே "


 " மழை ஒரு லட்சியவாதி , அதன் லட்சியம் நிறைவேறும் வரை பொழிந்து கொண்டேதான் இருக்கும் "


" ம்ம்... அப்படியென்ன லட்சியம் ? "


" உன்னை தொட்டு பார்ப்பதுதான்...!! "


" ம்ம்.. ஏற்க்கனவே ரொம்ப குளிரா இருக்கு , இதுல இந்த ஐஸ் வேறயா ? " - சிரிக்கிறாள்

" நிஜம்தான் உன்னை தொட்டுபார்க்கும் ஆசையிலத்தான் வானத்துல இருந்து பூமிய நோக்கி நெடும் பயணம் செய்யுது இந்த மழை.ஆனா அதை புரிஞ்சுக்காமா நீதான் கருப்பு குடை புடிக்கிற ,அதனால துக்கம் தாங்காம தொடர்ந்து அழுகிறது ஆனாலும் தரையில விழுந்ததும் சிரிக்கிறது ஏன் தெரியுமா?? , உன் பாதத்தையாவது தொட்டு விட்ட சந்தோசத்துலத்தான். "

" அதுக்காக என்னை மழையில நனைய சொல்லுறியா?? ஜலதோசம் பிடுச்சுக்காதா? "


" நீ நனைந்தால் உனக்கு மட்டும்தான் ஜலதோசம் பிடிக்கும் நனையாவிட்டால் ஜலத்துக்கெல்லாம் தோசம் பிடிச்சுக்காதா?? "


" ஆகா !!! ஆரம்பிச்சுட்டியா ?? இதுக்கு இந்த மழையே தேவல " - என்று கூறி குடையை தூக்கியெறிந்து விட்டு நடக்கிறாய் , குஷியில் கொட்டித்தீர்த்தது மழை


..
இது ஏற்கனவே பதிவிட்டதுதான்
இப்போ காதலர்தினத்துக்காக மீண்டும்

மேலும் சில 

இதே நாள், இதே மண்டபம்

கண்கள் இரண்டால் 

காதல் மனைவியும் காலண்டர் முருகரும்

ஆனாலும் காதலிக்கிறோம்!

என் காதலியே என் காதலியே

..........

பிரியமுடன் பிரபு ..

34 comments:

  1. //" ஆகா !!! ஆரம்பிச்சுட்டியா ?? இதுக்கு இந்த மழையே தேவல " - என்று கூறி குடையை தூக்கியெறிந்து விட்டு நடக்கிறாய் , குஷியில் கொட்டித்தீர்த்தது மழை//

    சூப்பர்...நண்பா... நடத்துங்க....

    ReplyDelete
  2. அற்புதம் அருமையான வரிகள‌

    ReplyDelete
  3. கவித்துவமான எழுத்துக்கள் நண்பரே..வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. நல்லாருக்கு. மீண்டும்.

    ReplyDelete
  5. நீங்க ஏற்கனவே பதிந்திருந்தாலும் நான் இப்பத்தான் படிக்கிறேன்..நல்லா இருக்கு

    ReplyDelete
  6. க.பாலாசி said...

    //" ஆகா !!! ஆரம்பிச்சுட்டியா ?? இதுக்கு இந்த மழையே தேவல " - என்று கூறி குடையை தூக்கியெறிந்து விட்டு நடக்கிறாய் , குஷியில் கொட்டித்தீர்த்தது மழை//

    சூப்பர்...நண்பா... நடத்துங்க....
    /////////

    நன்றிங்க பாலாஜி

    ReplyDelete
  7. அபுஅஃப்ஸர் said...

    அற்புதம் அருமையான வரிகள‌
    ///

    நன்றி

    ReplyDelete
  8. கமலேஷ் said...

    கவித்துவமான எழுத்துக்கள் நண்பரே..வாழ்த்துக்கள்...
    /////

    நன்றி

    ReplyDelete
  9. வானம்பாடிகள் said...

    நல்லாருக்கு. மீண்டும்.
    ///////

    நன்றி

    ReplyDelete
  10. புலவன் புலிகேசி said...

    நீங்க ஏற்கனவே பதிந்திருந்தாலும் நான் இப்பத்தான் படிக்கிறேன்..நல்லா இருக்கு
    ///////

    நன்றி

    ReplyDelete
  11. NALLA MALAI UNGKAL KAVITHAIYIL. MALAIYIL NANAINTHU VAALTHTHUKIREN

    ReplyDelete
  12. நன்று. மழையை விரும்புகிறோம்...ஆனால் வந்தாள் மட்டும் எல்லோருமே கறுப்புக் (கொடிக்) குடை பிடித்து விடுகிறோம்..

    ReplyDelete
  13. ஏற்கனவே படித்தது தான். நல்ல கவிதை ஆகையால் நான் மறக்கவில்லை.
    அடுத்த வருஷமும் இதையே போட்டுடாதீங்க தம்பி. புதுசா எழுதுங்க.

    ReplyDelete
  14. Madurai Saravanan said...

    NALLA MALAI UNGKAL KAVITHAIYIL. MALAIYIL NANAINTHU VAALTHTHUKIREN
    ///////

    நன்றி

    ReplyDelete
  15. ஸ்ரீராம். said...

    நன்று. மழையை விரும்புகிறோம்...ஆனால் வந்தாள் மட்டும் எல்லோருமே கறுப்புக் (கொடிக்) குடை பிடித்து விடுகிறோம்..
    ...........//////////


    நன்றி

    ReplyDelete
  16. குந்தவை said...

    ஏற்கனவே படித்தது தான். நல்ல கவிதை ஆகையால் நான் மறக்கவில்லை.

    ///////

    நன்றி

    //

    அடுத்த வருஷமும் இதையே போட்டுடாதீங்க தம்பி. புதுசா எழுதுங்க.
    /////

    கண்டிப்பா

    ReplyDelete
  17. ஜலத்துக்கு தோஷமா - அடேங்கப்பா - கற்பனைக்கு ஒரு எல்லையே இல்லை

    நல்லாருக்குப்பா

    நல்வாழ்த்துகள் பிரபு

    ReplyDelete
  18. cheena (சீனா) said...

    ஜலத்துக்கு தோஷமா - அடேங்கப்பா - கற்பனைக்கு ஒரு எல்லையே இல்லை

    நல்லாருக்குப்பா

    நல்வாழ்த்துகள் பிரபு
    ///////////

    நன்றி அய்யா

    ReplyDelete
  19. மழைக்கு இப்படி ஒரு ஆசையா.... அல்லது மழை காரணம் காட்டி நீங்க விடும் தூதா?

    ReplyDelete
  20. சி. கருணாகரசு said...

    மழைக்கு இப்படி ஒரு ஆசையா.... அல்லது மழை காரணம் காட்டி நீங்க விடும் தூதா?
    ///


    கண்டுபிடுச்சீட்டீகளே?!!!!???!?

    ReplyDelete
  21. ம்ம்.. ஏற்க்கனவே ரொம்ப குளிரா இருக்கு , இதுல இந்த ஐஸ் வேறயா ?

    ReplyDelete
  22. நல்ல பதிவு நண்பரே. நல்ல பதிவு நண்பரே. உங்கள் புகழ் மென் மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. நல்ல கற்பனை. இப்படி எல்லாம் ஜஸ் வைக்கலாமா? சொல்லிக் கொடுத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  24. negamam said...

    ம்ம்.. ஏற்க்கனவே ரொம்ப குளிரா இருக்கு , இதுல இந்த ஐஸ் வேறயா ?
    ////

    வாங்க பாலா

    ReplyDelete
  25. சசிகுமார் said...

    நல்ல பதிவு நண்பரே. நல்ல பதிவு நண்பரே. உங்கள் புகழ் மென் மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    .////

    நன்றி சசிகுமார்

    ReplyDelete
  26. பித்தனின் வாக்கு said...

    நல்ல கற்பனை. இப்படி எல்லாம் ஜஸ் வைக்கலாமா? சொல்லிக் கொடுத்தமைக்கு நன்றி.

    .///

    நன்றிங்கோ

    ReplyDelete
  27. கீழ்தனமான கெட்ட வார்த்தை பயன் படுத்தி ஒரு அனானி பின்னூட்டம் இட்டுள்ளார்,பெண்களும் இந்த பதிவை படிப்பதால் , அதை நான் வெளியிடவில்லை

    முன்பே சொன்னதுதான்
    டேய் அப்பன் பெயர் தெரியதவனே
    பெயரோடு வந்து பின்னூட்டம் போடு

    ReplyDelete
  28. பிரபு சூப்பர்.மழைக்கே ஜலதோஷம் வந்திருக்கும் அருமை.

    ReplyDelete
  29. கவிதை நல்லாயிருக்கு சகோதரா!

    சிங்கையில் மொத்த மழையும் அன்றே கொட்டித் தீர்த்து விட்டதோ?! இப்போ மழையையே காணோமே. சூரிய பகவான்தான் வாட்டியெடுக்கிறார்.
    நாயகியை ரோட்டில் இறங்கி நடக்க விடுங்க அப்படியாவது மழை வருதான்னு பார்ப்போம்

    ReplyDelete
  30. அன்புடன் மலிக்கா said...

    பிரபு சூப்பர்.மழைக்கே ஜலதோஷம் வந்திருக்கும் அருமை.

    /////

    நன்ரி மலிக்கா

    ReplyDelete
  31. கவிதை நல்லாயிருக்கு சகோதரா!

    சிங்கையில் மொத்த மழையும் அன்றே கொட்டித் தீர்த்து விட்டதோ?! இப்போ மழையையே காணோமே. சூரிய பகவான்தான் வாட்டியெடுக்கிறார்.
    நாயகியை ரோட்டில் இறங்கி நடக்க விடுங்க அப்படியாவது மழை வருதான்னு பார்ப்போம்
    //////////

    நன்றி

    ReplyDelete
  32. Bogy.in said...

    புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
    உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
    ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

    தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

    இவன்
    http://www.bogy.in
    ///
    ம் நன்றி

    ReplyDelete
  33. மிகவும் ரசிக்கும்படி எழுதியுள்ளீர்கள்!

    காதலர்களுக்கிடையில் நடக்கும் உரையாடல்களுக்கு வரைமுறைகள் இல்லை, விதிமுறைகள் இல்லை, காதலன் (அ) காதலியின் மனம் மகிழும்படி இப்படித்தான் காமரசம். காதல்ரசம் ததும்ப உரையாடுவார்கள்!

    சிங்கப்பூரில் மழை பெய்தால் சீனப் பெண்கள் குடை பிடிக்கிறார்களா இல்லையா பிரபு!

    ReplyDelete
  34. சிவா said...
    மிகவும் ரசிக்கும்படி எழுதியுள்ளீர்கள்!

    காதலர்களுக்கிடையில் நடக்கும் உரையாடல்களுக்கு வரைமுறைகள் இல்லை, விதிமுறைகள் இல்லை, காதலன் (அ) காதலியின் மனம் மகிழும்படி இப்படித்தான் காமரசம். காதல்ரசம் ததும்ப உரையாடுவார்கள்!

    சிங்கப்பூரில் மழை பெய்தால் சீனப் பெண்கள் குடை பிடிக்கிறார்களா இல்லையா பிரபு!



    ////
    ம்ம்ம் குடை பிடிப்பார்கள்
    ம்ம்ம்ம் நான் தனியாகவும் அவர்கள் தனியாகவும் வெவ்வேறு குடை

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...